உலகத் தமிழச் செம்மொழி மாநாடு

ம்.. புரிகிறது "என்ன தமிழ் மீது ஒற்றை காணோம்" என்று பார்க்கிறீரோ?

" தலைப்பிலேயே இத்தனை தடுமாற்றாமா?" என்பதும் எனக்கு புரிகிறது.

எனக்கு சற்று நேரம் மிகப்பெரும் குழப்பமே வந்து விட்டது.

எதை வேண்டுமானாலும் மாற்றும் கலைஞர் , ஒரு வேளை ஒற்று தமிழுக்கு பொட்டு வைத்தாற் போல் இருப்பதால் அது பிடிக்காமல் எடுத்து விட்டாரோ என எண்ணினேன், ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை .

தமிழ் மீதான தங்களின் அளவு கடந்த பற்றைத் தான்   தமிழின தலைவரின் தொலைக்காட்சியில் இவ்வாறு காட்டி இருக்கின்றனர்.

இன்று ( 19.08.2010) மாலை ஒளிபரப்பான தாம் தூம் திரைப்படத்தின் ஊடே ஒளிபரப்பான தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான விளம்பரங்களில் தமிழின் ஒற்றை எடுத்து விட்டனர்.

(ழ்-->ழ)

முதலில் இந்த மாநாட்டிற்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்பட்டதுமே

" இது தமிழ் நோக்கிலான மாநாடா அல்லது தமிழர்களை தம் பக்கம் கவர்ந்து இழுக்கும்  மாநாடா?"

என்று ஒரு சந்தேகம் இருந்தது இப்போது அது நீங்கி விட்டது இம்மாநாடு இழுக்கும் மாநாடு தான் என முடிவாகி விட்டது. முதலில் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற என் ஆவல் அவல் ஆகி போனது.

தமிழை வளர்க்கும் மாநாடு என்று சொல்லி ஒற்றை நீக்கி தம் பற்றை நிறுவி உள்ளனர் இந்த தமிழினத்தினர்.

மிக சமீபத்தில் இந்த அரிய மாநாட்டிற்க்கு தலைமை,வரவேற்பு,நன்றி என பொறுப்புக்களை சுமப்போர் எவரென தெரிய வந்தது.

“ஐயகோ”

அனைவருமே அரசியல்வாதிகள் இல்லை உடன்பிறப்புகள்.

ஏன் இவர்கள் தான் இப்போது இருக்கும் தமிழர்களிலே மிகவும் புலமை பெற்றவரோ? வேறு எந்த தமிழ் அறிஞர்களும் இப்பூவுலகில் இல்லையோ? இந்த பொறுப்புகளிலே கலைஞர் ஒருவர் தவிர மற்றோர் எவரும் பொருந்துவார் இல்லை. நாம் எப்படி அறிஞர்களை உலக கழக மாநாட்டிலே எதிர்ப்பார்க்க முடியும்..?

என்ன பெரிதாக சாதித்து விட்டு இந்த மாநாடு என்று புரியவில்லை..

ஒருவேளை நம் சகோதர தமிழின ஈழத்தினரை ஒடிக்கியதற்காக எடுக்கப்படும் விழாவோ?

தொடரும்...