ஜிம்பாப்வே ஆதிக்கம் தொடருமா..?

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த கடைசி "லீக்" ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

3 நாடுகள் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (9-ந்தேதி) நடக்கிறது. இதில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டித் தொடரில் ஜிம்பாப்வே அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. அந்த அணி "லீக்" ஆட்டத்தில் இந்தியாவை 2 முறையும், இலங்கையை ஒரு முறையும் தோற்கடித்தது. இதனால் கோப்பையை வெல்வதற்கான முனைப்பில் ஜிம்பாப்வே அணி விளையாடும்.

இலங்கை அணி 4 ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தோற்றது. ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளைய இறுதிப் போட்டியில் இலங்கை அணி விளையாடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ரெய்னா தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வேயிடம் 2 முறை தோற்றது இலங்கையிடம் ஒரு முறை வென்று மற்றொரு முறை தோற்று இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லேபிள்கள்: ,