மெய்யும் பொய்..! பொய்யும் மெய்..!

தமிழினில் எழுதுவதில் தான் எத்தனை சுகம், அதுவும் மொத்த பொறியியற் படிப்பும் ஆங்கிலத்தில் வதைக்க தமிழை விட மனமின்றி ஏதாவது எழுதி விடுவது என் வழக்கம்.
அப்படி ஏதோ கிறுக்கியது தான் இது..

என்னால் இயன்றது இவ்வளவு தான்.
-------------------------------------------

பொய் இருவாறு பிறக்கும்
மெய் பொய்க்கும் போது பிறக்கும் ;
பொய் மெய்க்கும் போதும் பிறக்கும்

பொய் மெய்யாவதும் இல்லை
மெய் பொய்யாவதும் இல்லை
மெய்யுள்ள இடத்தினிற் பொய் இருப்பதில்லை
பொய்யுள்ள இடத்தினிற் மெய் இருப்பதில்லை

பொய்யினில் இரு வகை உண்டு
ரசிக்க வைக்கும் பொய்;
நம்ப வைக்கும் பொய்

முன்னது நடிகனை படைக்கிறது
பின்னது அரசியல்வாதியை ஆக்குகிறது
முன்னது நம்மை மகிழ்விக்கும்
பின்னது நம் மகிழ்வை எடுக்கும்.

----

இதற்கு மேலும் என்னால் முடியவில்லை நீங்கள் முயன்று பார்க்கலாமே.லேபிள்கள்: ,