99 நாட் அவுட்.! (1)

சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டுக்காக கடவுள் அனுப்பி வைத்த தூதுவர்.
இந்தியாவின் நூறு கோடி பேருக்கும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய செயல் என்றால் அது சச்சின் சதமடிப்பதாக இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

இருபது ஆண்டுகளை தாண்டியும், ஒரு இருபது வயது இளைஞனை போல விளையாடி வருகிறார் அவர். 1989 ல் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து நாட்டின் கிரிக்கெட் பசிக்கு இன்று வரை தீனி போட்டு வருகிறார் சச்சின்.

எல்லோரும் ஒரு சதம் அடிப்பதே பெரிய விசயம் என்றால் இவர் இப்போது சதத்தில் சதம் அடிக்கப் போகிறார். 99 சர்வதேச சதங்கள் அடித்து இருக்கும் அவர், இன்னும் கொஞ்ச நாட்களில் நூறாவது சதம் அடித்து விடுவார்.

சரி, இதுவரை அவரடித்த சதங்களின் தொகுப்பாக இந்த தொடர் பதிவை இடலாம் என்றிருக்கிறேன்.

இன்று :

1) 119* vs இங்கிலாந்து

இந்த போட்டியில் மட்டும் மொத்தம் ஆறு சதங்கள் அடிக்கப்பட்டன. ஆனால் சச்சின் அடித்த அந்த முதல் சதம், எல்லாவற்றிற்கும் மேலானது. தன் வருகையை கிரிக்கெட் உலகிற்கு உணர்த்திய சதம் அது.

சச்சின் நான்காவது இன்னிங்ஸ்-ல் சரியாக விளையாடமாட்டார் என்பவர்கள் கவனிக்க : சச்சினின் முதல் சதமே இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் இங்கிலாந்து வீரகளிடம் தஞ்சம் புக மனோஜ் பிரபாகர் உடன் கூட்டணி அமைத்து சதமடித்து இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு எடுத்தார்.

இதில் மொத்தம் 17 பவுண்டரிகள் அடித்து இருந்தார்.முதல் இன்னிங்க்ஸ்-ல் 68 ரன் அடித்து இருந்தார். ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டதில் வியப்பு ஏதுமில்லை.

Cricinfo ஆட்ட விவரம் 

                    

நாளை முதல் நாளொன்றுக்கு இரண்டு சதம் வீதம் இடலாமா? என்றிருக்கிறேன்..
பதிவு பிடித்தால் வாக்கு அளியுங்கள்..

லேபிள்கள்: , , ,