டி வில்லியர்ஸ் அதிரடியால் ஒரு ஓவருக்கும் மேல் மீதம் இருக்கையிலேயே பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
கொச்சியில் நடந்த ஐ.பி.எல்., போட்டியின் 3வது போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொச்சி டஸ்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கியுள்ள கொச்சி அணி 20வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து, பெங்களூரு அணிக்கு 162 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி 18.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.