பொங்கல்
நல்வாழ்த்துக்கள்..
திங்கட்கிழமை
பிறக்கிறது இத் தைத் திங்கள்...
ஆண்டு தோறும் எழும் அதே விவாதத்துடன் தான் இவ்வாண்டும் நாம் தைத்
திருநாளை கடந்தாக வேண்டும், தமிழரின் திருநாளாய் நாம் எல்லோரும் கொண்டாடும் தை 1
ஏன் தமிழ் புத்தாண்டு இல்லை..?
தற்காலிகமாக கலைஞர் இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைப்பதாக நினைத்துக்
கொண்டு தை 1 தமிழ் புத்தாண்டு என அறிவிக்க கடைசியில் ஆதரவை விட அதற்கு எதிர்ப்பே
அதிகம்.
தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழியிலேயே தமிழ்ப்
புத்தாண்டு எதுவென தெரிகிறது, எப்படி 2012 சரியில்லை 2013 வந்தால்
எல்லாம் சரி ஆகி விடும் என்று எண்ணுகிறோமோ அது போல தான் இதுவும்.
விடுங்கள், எந்த விழாவுமே இல்லாத கோடைக் காலத்தில் புத்தாண்டாவது
இருந்து விட்டுப் போகட்டும்.
மற்றெந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு தை மாதம் பிறக்க வேண்டிய வழிகள்
அதிகம்.
பன்னாட்டு நிறுவனங்களால் நலியப் போகும் சிறு வியாபாரிகள்,
நள்ளிரவு என்ன நண்பகலிலேயே நிம்மதி இல்லாத பெண்கள்,
நாளுக்கு நாள் சிக்கல் முடிச்சுகள் அதிகமாகும் அரசியல்,
சொந்த ஊரிலேயே அடிபடும் இந்திய கிரிக்கெட் அணி,
இந்தியாவில் வருமான வரி கட்டுவோர் 3% மட்டுமே,
அதிலும் ஏதேதோ பிரிவுகளின் கீழ் சேமித்து வரியை மிச்சப் படுத்துவோர் ஒரு பக்கம்
என்றால், வரித்துறை கண்ணுக்கே தெரியாமல் கோடிகளில் மறைப்போர் ஏராளம். இந்தியாவின்
மொத்த சொத்து மதிப்பும் ஏதோ சில குடும்பங்களிடம் தான் இருக்கிறதாம்.
அந்த
குடும்பங்கள் எதுவென தெரிந்து விடுவதால் பயன் ஏதும் இருக்கும் என தெரியவில்லை
எனக்கு.
தை பிறந்தாயிற்று வழிகள் பிறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் நான்,
நீங்க எப்படி?