என் செய்வேன் இப்போது?அதிக மதிப்பு எண்கள் இருந்தும் வேலையில்லாது
அலைவோரை ‘கடம்’ என்றவன் நான்,
எண்கள் எல்லாம் தலை எழுத்தை
மாற்ற போதுமானதல்ல என தெரிந்தும்
என் செய்வேன் இப்போது?

எட்டு மணி நேரமே வேலை
என்றெண்ணிய நான் ஏழு தினங்களும்
போதாமல் தவிக்கிறேன்
என் செய்வேன் இப்போது?

வாழ்க்கையில் படிப்பது சுலபம்,
வாழ்க்கையை படிப்பது கடினம்
என்றோரை ஏளனப் பார்வையால்
கடந்தவன் நான், உண்மை புரிந்தும்
என் செய்வேன் இப்போது?

என் ஊரில் கல்வி ஒரு எட்டாக் கனி
எட்டிப் பிடித்தேன், என் தந்தை தயவால்..!
என்னுள் ஏதோ தவறென தெரிந்தும்
தெரிந்து திருந்த முடியவில்லை
என் செய்வேன் இப்போது?லேபிள்கள்: ,