தன்மானம்

தெரிவு வேண்டும் உன்னுரிமை தன்னில்
தெளிவு வேண்டும் பிறருரிமை தன்னில்

உன்னின் மரபு மறை
உறை யாவும் இருக்கட்டும்
உனதாகவே எப்போதும்

ஞாயிறு என்றும் நாணம்
கொண்டதில்லை மேகம் தன்னை
மறைக்காத பொழுதினில்

உன்னை உனதாக ஊருக்கோ
உணர்த்திட வெட்கம் ஏனடா?
வேட்கை வேண்டாம்
வெறுப்பாவது விட்டொழி
உண்மை தன்மானத்துடன்

உன் இனம் குணம் யாவும்
உனதாகவே இவ்வுலகு அறியட்டும்

--- மனோவி

லேபிள்கள்: , ,