நாம் தமிழர் கட்சி சின்னம்... தமிழின அடையாளமா?

[post_ad]
நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற சீமான் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இருக்கும். நாம் தமிழர் கட்சிக்கு இரட்டை மெழுகுவத்தி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மெழுவத்தி தன்னைத்தானே வருத்திக் கொண்டு ஒளி தருவது போலவே, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களும் தங்களை வருத்திக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும். தியாகத்தின் குறியீடான மெழுகுவத்தியைப் போலவே நாங்கள் பணியாற்றுவோம். நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் செயற்கை மது ஒழிக்கப்பட்டு தென்னம்பால், பனம்பால் விற்பனைக்கு கொண்டு வரப்படும். உலகம் முழுவதுமுள்ள தமிழ் தொழிலதிபர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் அடையாளம் பற்றி அதிகம் பேசுபவர் எப்படி மெழுகுவர்த்திக்கு போனார்?

எந்த வகைல இது தமிழர் அடையாளம் தெரிஞ்சா சொல்லுங்களேன்..

லேபிள்கள்: ,